இருளில் மூழ்கிய பிரான்ஸ்! நியூஸிலாந்து துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி!

Report

நியூஸிலாந்தின் Christchurch நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 49 பேர் உயிரிழந்ததையடுத்து, பிரசித்தி பெற்ற ஈஃபிள் கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளன.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இதனை அறிவித்துள்ளார்.

அதன்படி, நேற்று (சனிக்கிழமை) இரவு முதல் ஈஃபிள் கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டதால், நேற்று நள்ளிரவு முதல் பிரான்ஸ் இருளில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், லண்டனில் உள்ள நியூசிலந்துப் போர் நினைவிடத்தில் பலர் மலர்களையும் செய்திகளையும் விட்டுச் சென்றனர்.

இதேவேளை இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

601 total views