ஓவியம் வரையும் 50 வயது ஒராங்குட்டான்

Report

பிரான்ஸில் நெனட்டே (nenette) எனும் 50 வயது ஒராங்குட்டான் பெண் குரங்கு ஒன்று, ஓவியங்களை வரைந்து பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றது.

பிரான்ஸ் பாரிசில் உள்ள ஜார்டின் டேஸ் பிளான்டீஸ் விலங்கியல் பூங்காவில், கடந்த 1972ம் ஆண்டு முதல் குறித்த குரங்கு வளர்க்கப்பட்டு வருகிறது.

பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் முக்கிய விருந்தாளியாக இருக்கும் இந்த குரங்கு, அண்மையில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளது.

வயது முதிர்வின் எந்த வித சோர்வும் இன்றி கூண்டை வலம் வரும் ஒராங்குட்டான், கிரையான் மற்றும் வண்ணங்களைக் கொண்டு ஓவியங்களை தீட்டி வருகிறது.

எந்த பயிற்சியுமின்றி தானாக ஓவியம் தீட்ட ஆர்வம் காட்டி வரும் குறித்த ஒராங்குட்டானை சிறுவர்கள் உட்பட பலரும் வந்து பார்த்து செல்கின்றனராம்.

718 total views