பிரான்ஸின் ஐந்து மாவட்டங்களுக்கு கடும் செம்மஞ்சள் எச்சரிக்கை!

Report

பிரான்ஸின் ஐந்து மாவட்டங்களுக்கு கடும் வெப்பம் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Météo France இனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிஸ், Hauts-de-seine, Seine-saint-denis, Val-de-marne, Seine-et-Marne ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கே இவ்வாறு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று பரிஸ் மற்றும் அதன் புறநகர்களில் 30°c வரையான வெப்ப நிலை பதிவானதாக Météo France அறிவித்துள்ளது.

Jardin du Luxembourg, Nemours, Paris-Montsouris மற்றும் Fontainebleau ஆகிய பிராந்தியங்களில் 29°c, 30°c வரையான வெப்பநிலை பதிவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

995 total views