Nancy - தொடரூந்து நிலையத்தில் நபர் மீது தாக்குதல் : மூன்று சிறுவர்கள் கைது!

Report

தொடரூந்து நிலையத்தில் வைத்து நபர் ஒருவரை தாக்கிய வழக்கின் கீழ் மூன்று சிறுவர்கள் Nancy இல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் 14 மற்றும் 15 வயதுடையவர்கள் என அறிய முடிகிறது. நேற்று ஜூன் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 22:00 மணி அளவில் Nancy தொடரூந்து நிலையத்துக்கு அருகே (Meurthe-et-Moselle) வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஐந்துக்கும் மேற்பட்ட சிறுவர்களால் 60 வயதுடைய நபர் ஒருவர் மோசமாக தாக்கப்பட்டுள்ளார். சுயநினைவு இழந்த நிலையில் அவர் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலை நடத்தியவர்களில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் 14 வயதுடையவர் எனவும் மற்றைய இருவருன் 15 வதுடையவர்கள் எனவும் அறியமுடிகிறது. ஏனைய சிறுவகள் தப்பியோடியுள்ளனர். Nancy நகர காவக்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

846 total views