பாடசாலையில் துன்புறுத்தல் : தற்கொலைக்கு முயன்ற மாணவன்..!

Report

பாடசாலையில் இடம்பெற்ற மோசமான அனுபவம் காரணமாக 12 வயது சிறுவன் ஒருவர் தற்கொலை முயன்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் கடந்த ஜூன் மாத ஆரம்பத்தில் இடம்பெற்றிருந்த போதும், அதுகுறித்த தகவல்கள் தற்பொதே வெளியாகியுள்ளன. Val-d'Oise இன் Marly-la-Ville நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆறாவது வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவன் மீது சக மாணவர்களால் இந்த துன்புறுத்தல் மேற்கொள்ளப்பட்டுளது.

குறித்த மாணவனை கீழே தள்ளி விழுத்தி, அவனது உடைகளை களைந்து நிர்வாணப்படுத்தியுள்ளனர். பின்னர் அவனது பின் பக்கத்தில் தாக்கியும், சில மோசமான செயல்களையும் மேற்கொண்டிருந்தனர்.

மறுநாள் குறித்த சிறுவன் தற்கொலைக்கு முயன்றதாகவும், அதில் இருந்து காப்பாற்றப்பட்டதன் பின்னரே நிகழ்ந்த சம்பவங்கள் தமக்கு தெரியவந்ததாகவும் சிறுவனின் பெற்றோர்கள் குறிப்பிட்டனர்.

பின்னர் பாடசாலை நிர்வாகம் மீது தற்போது வழக்கு தொடுத்துள்ளனர். சிறுவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் கொண்டுள்ளதாக அவர்களின் குற்றச்சாட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

896 total views