மகிழுந்துக்குள் மறந்துவிடப்பட்ட குழந்தை...பரிதாபமாக பலி! பெற்றோர் கைது

Report

மகிழுந்து ஒன்றுக்குள் குழந்தை ஒன்றை மறந்துவிட்டுச் சென்ற நிலையில், குழந்தை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் Gaubertin (Loiret) இல் இடம்பெற்றுள்ளது. செவ்வாய்க்கிழமை நண்பகல், ஒரு வயதுடைய குழந்தை ஒன்றை அவர்களது பெற்றோர்கள் மகிழுந்துக்குள் விட்டுச் சென்ற நிலையில், இரண்டு மணிநேரம் கழித்து குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

30°C வரை நிலவிய வெப்பத்தினால் குழந்தை உடல்நலம் குன்றி உயிரிழந்துள்ளது. Gaubertin நகரில் வசிக்கும் குறித்த பெற்றோர்கள் இருவரையும் காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர்.

குழந்தை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்று இரவு குழந்தை உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. நாளை வெள்ளிக்கிழமை உடற்கூறு பரிசோதனை இடம்பெற உள்ளது. விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

1445 total views