வார இறுதியில் வீதிகளை நிறைக்கும் வாகனங்கள் : சிவப்பு எச்சரிக்கை..!

Report

எதிர்வரும் விடுமுறை நாட்களை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை மற்றும் வார இறுதி நாட்களில் அதிகளவான வாகன நெரிசல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீதி கண்காணிப்பாளர்களான Bison Fûté இன்று வியாழக்கிழமை இத்தகவல்களை வெளியிட்டுள்ளது. நாளை ஜூலை 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இல்-து-பிரான்சுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிச்செல்லும் வீதிகளில் மிக அதிகளவான வாகன நெரிசல் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தவிர நாளைய தினம் இல்-து-பிரான்ஸ் தவிர்த்த ஏனைய மாகாணங்ககுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் சனிக்கிழமை இல்-து-பிரான்சுக்குள் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் வெளிச்செல்லும் வீதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

764 total views