TER இல் சிக்கிக்கொண்ட பெண் : மேலும் இரு சிறுமிகளும் காயம்!

Report

மூன்று பெண்கள் தொடருந்து ஒன்றில் சிக்கி காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்துக்கு பின்னால் உள்ள காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை Belleville-sur-Meuse (Meuse) இல் இடம்பெற்றுள்ளது. ஜூலை 11, நேற்று வியாழக்கிழமை 19:40 மணி அளவில் பெண் ஒருவர் TER தொடருந்தில் சிக்குண்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். தண்டவாளத்துக்கு அருகே நின்றிருந்த மேலும் இரு சிறுமிகளும் காயமடைந்துள்ளனர்.

Metz இல் இருந்து பத்து பயணிகளுட Verdun நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தொடருந்தே இந்த விபத்துக்குள்ளானது. காயமடைந்த மூன்று பெண்களுக்குமான உறவுமுறை குறித்து அறியமுடியவில்லை.

சம்பவ இடத்தில் தடையங்களை தேடிவரும் காவல்துறையினர், எதற்காக அவர்கள் இங்கு நின்றனர் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும், காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்களில் இரண்டு சிறுமிகளின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

716 total views