மிக மோசமான ஊனத்துடன் பிறந்த குழந்தை... மருத்துவருக்கு சிறை : €400,000 தண்டப்பணம்..!

Report

மிக மோசமான உடல் ஊனத்துடன் பிறந்திருந்த குழந்தை ஒன்றுக்காக மருத்துவம் பார்த்தை மருத்துவர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பத்து வருடங்களுக்கு முன்னர் 2008 ஆம் ஆண்டில் இடம்பெற்றிருந்தது. Maine-et-Loire (Angers) இல், பெண் ஒருவர் மோசமான உடற்சிதைவுடன் குழந்தை ஒன்றை பெற்றெடுத்திருந்தார். கிட்டத்தட்ட 90 வீதமான உடல் ஊனமுற்றிருந்தது.

சாதாரண பிரசவ திகதியில் இருந்து ஐந்தில் இருந்து ஆறு வாரங்கள் முன்னதாகவே குழந்தை அறுவைச் சிகிச்சை மூலம் வெளியில் எடுக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 27, 2008 ஆம் ஆண்டு பிறந்த இந்த குழந்தை உடல் ஊனமாக பிறப்பதற்கு மருத்துவரே முழுக்க முழுக்க காரணம் என பின்னர் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

11 வயதாகும் இக்குழைந்தை தற்போதும் 90 வீதமான உடல் ஊனத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பேசமுடியாமல், நடக்க, சாப்பிட முடியாமல் இருப்பதாக குடும்ப வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தவாரத்தில் Angers குற்றவியல் நீதிமன்றம் €400,000 நஷ்ட்டஈடும், சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

1750 total views