ஜூலை 14 நிகழ்வுகள்... பரிசில் 2,500 காவல்துறையினர்.!

Report

நாளை மறுதினம் ஜூலை 14, தேசிய நாள் நிகழ்வுகளின் போது பரிசில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஜூலை 14 ஆம் திகதி பரிசின் பல இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் இந்த முன்னேற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாளை சனிக்கிழமை ஜூலை 13 ஆம் திகதியில் இருந்து இரவு முழுவதும், ஞாயிற்றுக்கிழமை நாள் முழுக்க மற்றும் திங்கட்கிழமை நண்பகல் வரை பரிஸ் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் Christophe Castaner தெரிவிக்கும் போது, ஜூலை 14, அனைவருக்குமான நாள். அனைவதும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு பாதுகாப்புகளுக்காக பரிசுக்குள் 2,500 காவல்துறையின் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

573 total views