மெற்றோ சுரங்கத்துக்குள் 100% இணைய தொடர்பு : இவ்வருட இறுதிக்குள்..!

Report

இவ்வருட இறுதிக்குள் மெற்றோ சுரங்கம் முழுவதும் 4G இணைய சேவை கொண்டுவர தீவிரமாக RATP செயற்பட்டுவருதாக அறிய முடிகிறது.

RATP தெரிவிக்கும் போது, 80 வீத மெற்றோ சுரங்கள் இணையத் தொடர்பை கொண்டிருப்பதாகவும், இவ்வருட இறுதிக்குள் அது 100 வீதமாக மாற்ற துரிதமாக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

la Fédération nationale des associations d’usagers des transports (FNAUT) இன் துணை நிர்வாகி Michel Babut, தெரிவிக்கும் போது, தொடருந்தில் பயணிக்கும் போது பயணிகள் இணையத்தை பயன்படுத்த முயற்சிக்கும் போது, மிகுந்த கோவத்தை அடைகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இந்த துரிதமான நடவடிக்கை அந்த குறையை தீர்க்கக்கூடியதாக இருக்கும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது தொடருந்து நிலையங்களில் போதிய அளவு இணைய தொடர்பு இருக்கின்ற போதும், சுரங்கப்பாதைக்குள் தொடரூந்தில் பயணிக்கும் போது போதுமான இணையத்தொடர்பு கிடைக்கப்படவில்லை எனவும், இல்-து-பிரான்சுக்குள் இதற்கு முழுமையான தீர்வு கொண்டுவரப்படும் எனவும் RATP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

933 total views