இராணுவ நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்ட மூன்று இராணுவ வீரர்களுக்கு நேர்ந்த பரிதாபம்..!

Report

இராணுவ நடவடிக்கை ஒன்றின் போது, மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

Guyane இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவ அமைச்சகம் இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை இரவு, சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்படுவதை தடுக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.

அதன் போது விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் அதில் இராணுவ வீரர்கள் மோசமாக காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இராணுவ அமைச்சர் Florence Parly தெரிவித்துள்ளார்.

மொத்தமாக எட்டு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், அதில் மூன்று வீரர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'விபத்து' தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

547 total views