பரிசில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் : நாடு முழுவதும் பாதுகாப்பு..!

Report

இன்று இடம்பெற உள்ள ஆபிரிக்க கிண்ண இறுதிப்போட்டியை அடுத்து, வன்முறைகளைத் தவிர்க்கும் முகமாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அல்ஜீரியா - செனெகல் நாடுகள் மோதும் ஆபிரிக்க கிண்ண இறுதிப்போட்டி இன்று உள்ளூர் நேரம் 21:00 மணிக்கு ஆரம்பமாகின்றது. இந்த போட்டிகளின் போது வன்முறைகள் எதுவும் இடம்பெறாமல் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறிப்பாக தலைநகர் பரிசில் 2,500 காவல்துறையினர் மேலதிகமாக கடமையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோம்ப்ஸ்-எலிசே உள்ளிட்ட முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மார்செயில் 600 காவல்துறையினர் மேலதிகமாக குவிக்கப்பட்டுள்ளனர். பழைய துறைமுகம் பகுதியில் பலத்த வன்முறை வெடிக்க வாய்ப்பு உள்ளதால், அப்பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர, பரவலாக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் காவல்துறையினர் நாளை காலை வரை பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்ஜீரிய அணியின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறையின் முடிவில், நாடு முழுவதும் 282 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

926 total views