உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கத்தின் குட்டி!

Report

திமிங்கிலத்தின் குட்டி ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது

நேற்று செவ்வாய்க்கிழமை காலை Finistere நகரின் Penmarc'h கடற்பிராந்தியத்தில் இந்த திமிங்கிலம் கண்டுபிடிக்கப்பட்டது. 13 மீற்றர் நீளம் கொண்ட இது ஒரு 'இளம் திமிங்கிலம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இந்த திமிங்கிலத்தை பார்வையிட்டு வருகின்றனர். இன்று புதன்கிழமைக்கு பின்னர் தான் திமிங்கிலம் உயிரிழந்ததுக்குரிய காரணம் அறிய முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கப்பல் ஒன்றுடன் மோதி உயிரிழந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என முதல் கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இக்கடற்கரையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. fin whale என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இவ்வகை திமிங்கிலங்கள் 20 மீற்றர் நீளம் வரை வளரும். நீலத் திமிங்கிலங்களுக்கு பிறகான மிகப்பெரிய கடல்வாழ் உயிரினம் இதுவாகும்.

இப்பிராந்திய கடற்கரைகளில் வருடத்துக்கு ஆறு வரையான திமிங்கிலங்கள் கரையொதுங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

509 total views