பிரான்ஸில் essonne நகரில் முதியவர் படுகொலை! குற்றவாளி கைது

Report

Essonne நகரில் முதியவரை கொலை செய்த குற்றத்துக்காக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Maisse இல் உள்ள முதியவர்கள் ஓய்வு இல்லத்தில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு இந்த இல்லத்துக்குள் நுழைந்த நபர் ஒருவர், அங்கிருந்த முதியவர் ஒருவரை கத்தியால் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

செவ்வாய்க்கிழமை காலை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த முதியவரை பராமரித்து வந்த தாதியர் ஒருவர் குற்றவாளியை நேரில் பார்த்துள்ளார். பின்னர் அவர் குறித்த அடையாளங்களை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

அதை அடிப்படையாக வைத்து, நேற்று செவ்வாய்க்கிழமை குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலை செய்ததற்குரிய காரணம் குறித்து அறியமுடியவில்லை. விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

335 total views