பாரீஸ் 22 வயது இளம் பெண் தீயில் கருகி பலி - கணவர் கைது!

Report

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் இல் விபத்தை ஏற்படுத்தி மனைவியை கொலை செய்த வழக்கில் இளைஞன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Loiret நகரின் வடக்கு பிராந்தியமான Malesherbes இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 13 ஆம் திகதி அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் தீ பரவியிருந்தது.

மிக மோசமாக பரவிய தீ விபத்தை தொடர்ந்து, 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவத்தில் அவரின் மூன்று மாத குழந்தையும், அவரது கணவரும் சில காயங்களுடன் தப்பிய நிலையில் தீ விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணைகளில், இந்த தீ தற்செயலாக ஏற்பட்ட விபத்து இல்லை என தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளில் தீ கணவரால் ஏற்படுத்தப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

இச்சம்பவத்துக்கு முன்னர் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மனைவியை அவர் தாக்கி கொலை செய்திருந்தமை அம்பலமாகியுள்ளது.

குறித்த கொலையை மறைக்கவே கணவர் தீ பற்றவைத்து 'விபத்து' போல் ஜோடனை செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1358 total views