பாரிஸ் துப்பாக்கிச்சூட்டில் 39 வயதுடைய நபர் ஒருவர் பலி!

Report

இந்த சம்பவம் பாரிஸ் Alsace மாவட்டத்தின் Mulhouse நகரில் நேற்று முன் தினம் ஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 39 வயதுடைய நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

பலியான நபருடன் மேலும் இருவர் காரில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இரு முகமூடி அணிந்த ஆயுததாரிகள் குறித்த நபர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதில் 39 வயதுடைய நபர் கொல்லப்பட்டதோடு, மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட நபருக்கு என ஒரு பெயர் இருப்பதாகவும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எனவும் , பண கொடுக்கல் வாங்கல் காரணமாகவே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1003 total views