ஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்!

Report

ஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 39 வயதுடைய நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

வியாழக்கிழமை இச்சம்பவம் Alsace மாவட்டத்தின் Mulhouse நகரில் இடம்பெற்றுள்ளது. 39 வயதுடைய நபர் ஒருவர் மேலும் இரு நபர்களுடன் மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது உந்துருளியில் வந்த இரு முகமூடி அணிந்த ஆயுததாரிகள் குறித்த நபர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் 39 வயதுடைய நபர் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்றாம் நபர் காயமடையவில்லை.

கொல்லப்பட்ட நபருக்கு Samir les yeux bleus என ஒரு பெயர் இருப்பதாகவும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எனவும் அப்பிராந்திய காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

தவிர, பண கொடுக்கல் வாங்கல் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக நேற்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

941 total views