150 கலந்துகொண்ட குழு மோதல் : மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம்.!

Report

மூன்று காவல்துறை அதிகாரிகள் காயமடையக் காரணமாக இருந்த குழு மோதல் ஒன்றில் 150 பேர் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. Antibes (Alpes-Maritimes) நகரில் உள்ள கடற்கரையை சார்ந்துள்ள இரவு விடுதி ஒன்றின் வாசலில் குழு மோதல் வெடித்துள்ளது.

காலை 5 மணிக்கு விடுதியில் இருந்து வெளியேறிய நபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கியதாக அறியமுடிகிறது. முதலில் 15 பேர் மாத்திரம் இந்த மோதலில் ஈடுபட்டதாகவும் அவர்களில் பலருக்கு முகத்தில் காயமடைந்ததாகவும், பற்கள் உடைந்து இரத்தம் கொட்டியதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

பின்னர் இந்த எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து 150 பேர் வரையில் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். பதின்மூன்று CRS அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர். மோதலை கட்டுப்படுத்த முற்பட்டனர்.

ஆனால் அவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் இடம்பெற்றன. இதில் மொத்தமாக மூன்று காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1130 total views