பரிஸில் நாற்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம்!

Report

நேற்று சனிக்கிழமை பரிஸ் மற்றும் Toulouse ஆகிய நகரங்களில் நாற்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம் இடம்பெற்றது.

மஞ்சள் மேலங்கி போராட்டம் மெல்ல மெல்ல நலிவடைந்து வருவதை அடுத்து, நேற்று சனிக்கிழமை பரிசில் சில நூறு போராளிகள் மாத்திரமே கலந்துகொண்டிருந்தனர்.

Place de la Republique பகுதியில் நண்பகலை ஒட்டி, 300 வரையான போராளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Toulouse நகரில் 350 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இரு நகரங்களிலும் வன்முறைகள் ஏதும் வெடிக்கவில்லை.

மஞ்சள் மேலங்கி போராட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவிக்கும் போதும், பரவாயில்லை. மக்கள் ஓய்வு எடுக்கின்றன்றனர்.

ஆனால் அரசு மீதான கோவம் எப்போதும் அவர்களுக்கு இருக்கின்றது. விரைவில் மீண்டும் வெகுண்டெழுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

972 total views