இத்தாலி தீவில் மணல் திருடியவர்களுக்கு கிடைத்த கடுமையான தண்டனை!

Report

இத்தாலி நாட்டுக்குச் சொந்தமான தீவு ஒன்றில் மணல் திருடிய இரண்டு பிரெஞ்சு நபர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய தரைக்கடலில் இத்தாலியின் கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய தீவான Sardinia தீவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீவினை பழமை மாறாமல் அப்படியே வைத்துள்ளனர்.

பிரான்சின் Toulon நகரைச் சேர்ந்த இரண்டு நபர்கள் இத்தீவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். அப்போது அவர்கள் பயணித்த மகிழுந்துக்குள் மணல் கடத்தப்பட்டுச் செல்வதை காவல்துறையினர் அவதானித்து அவர்களை சோதனையிட்டனர்.

அவர்கள் 14 நெகிழி போத்தல்களில் மணல் நிரப்பிக்கொண்டு சென்றுகொண்டிருந்துள்ளனர்.

மொத்தமாக 40 கிலோ எடையுள்ள மணல் திருடப்பட்டிருந்தது. பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவருக்கும் குறைந்தது ஆறு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என அறியமுடிகிறது.

1486 total views