உச்சக்கட்ட பாதுகாப்பின் கீழ் G7 மாநாடு : 10,000 காவல்துறை ஜோந்தாமினர்கள் குவிப்பு..!

Report

வரும் வார இறுதியில் இடம்பெற உள்ள G7 மாநாட்டுக்காக சிறப்பு பாதுகாப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் சனிக்கிழமை ஓகஸ்ட் 24 ஆம் திகதி ஆரம்பிக்கும் இந்த மாநாடு, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர உள்ளது.

Biarritz நகரில் இடம்பெறும் இந்த நிகழ்வில் மிக முக்கியமான தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளதால் சிறப்பு பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 6,000 CRS காவல்துறை அதிகாரிகள் மிகுந்த கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

குறிப்பாக துறைமுகம், கப்பல் போக்குவரத்து, கடற்பிராந்தியம் என அவர்கள் மிக தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

தவிர, GIGN அதிரடிப்படையினரும், RAiD அதிரடிப்படையினரும் ஜோந்தாமினரும் கடமையில் ஈடுபடுவார்கள்.

குறிப்பாக வீதி வழி பாதுகாப்பில் ஜோந்தாமினர்கள் தீவிரமாக ஈடுபடுவார்கள் எனவும், அதிரடிப்படைகள் அவசியம் கருதி செயற்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1225 total views