காவல்துறையினரின் கண்காணிப்பு மகிழுந்தை திருடிச் சென்ற நபர்! பின் நேர்ந்த கதி

Report

நபர் ஒருவர் காவல்துறையினரின் கண்காணிப்பு மகிழுந்து ஒன்றை திருடிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் சனிக்கிழமை Tarbes நகரில் இடம்பெற்றுள்ளது. 38 வயதுடைய நபர் ஒருவர் மகிழுந்து ஒன்றில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்துள்ளார். வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர், குறித்த சாரதியை தடுத்து நிறுத்தியுள்ளார்.

மது போதையில் இருந்த குறித்த நபரை விசாரித்துக்கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத அச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஓடிச்சென்று காவல்துறையினரின் மகிழுந்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மகிழுந்தில் இருந்த சமிக்ஞை ஒலி (சைரன்) எழுப்பிக்கொண்டு சென்றுள்ளார்.

ஒலிவாங்கி மூலமாக காவல்துறையினர் குறித்த நபருடன் உரையாட முயன்றுள்ளனர். அதன்போது அவர் தகாத முறையில் காவல்துறையினருடன் உரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சில நிமிடங்களில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

685 total views