வீதி கண்காணிப்பு ரேடார் கருவியை எரியூட்டிய மூவருக்கு நேர்ந்த கதி.!

Report

மார்செய் நகரில் வீதி கண்காணிப்பு ரேடர் கருவியை எரியூட்டிய மூவர் BAC அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மார்செயின் Saint-Loup நகரில் வைத்து திங்கட்கிழமை இரவு மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முகமூடி அணிந்த மூன்று நபர்கள் வீதி ஓரத்தில் இருந்த அதி நவீன கண்காணிப்பு ரேடார் கருவிகளை பெற்றோல் ஊற்றி தீமூட்டியுள்ளனர்.

வீதி கண்காணிப்பில் ஈடுபட்ட BAC அதிகாரிகள் மூவரையும் உடனடியாக கைது செய்தனர். அவர்கள் தங்களை 'மஞ்சள் மேலங்கி போராளிகள்' என தெரிவித்தனர். ஆனால் இச்செயலில் ஈடுபட்டபோது அவர்கள் மஞ்சள் மேலங்கி எதுவும் அணிந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் 28- 58 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்களுக்கு சட்டவிதி 322-1 இன் படி அதிகபட்ச தண்டனையாக இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர ஒவ்வொருவருக்கும் €75,000 வரை தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

718 total views