பிரபல விடுதியின் ஆறாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு!

Report

பரிஸ் முதலாம் வட்டாரத்தில் இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது..

67 வயதுடைய நபர் ஒருவர் இங்குள்ள Ritz Place Vendome விடுதியின் ஆறாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று 14:50 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் SAMU மருத்து உதவியாளர்கள் குறித்த நபரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அந்த முயற்சி கைகொடுக்கவில்லை. பின்னர் அவர் தங்கியிருந்த அறை சோதனையிடப்பட்டது.

அறையினுள் ஒரு கடிதம் மற்றும் அதிகமாக மதுபான போத்தல்கள், ப்ளாஸ்டிக் பைகள் போன்றன கிடந்துள்ளன. கடிததில் தாம் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக எழுதியிருந்துள்ளார். அக்கடிதம் செப்டம்பர் 14 ஆம் திகதி எழுதப்பட்டுள்ளது.

அவரின் குடும்பத்தினருக்கு எமது இரங்கல்கள் என Ritz விடுதி மேலாளர்கள் தெரிவித்தனர்.

866 total views