T1 ட்ராம் பயணிக்கும் தண்டவாளத்தில் மிதிவண்டி செலுத்திய நபர்! சமூக வலைத்தளத்தில் தீயாக பரவும் காணொளி

Report

நபர் ஒருவர் ட்ராம் பயணிக்கும் தண்டவாளத்தில் மிதிவண்டி ஓட்டியுள்ளார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. அன்று காலை T1 ட்ராம் Villeneuve-la-Garenne நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டது. சில நிமிடத்தில் காலை 9:15 மணி அளவில் ட்ராம் Chemin des Reniers பகுதியை வந்தடையும் போது பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

ட்ராம் செல்லும் தண்டவாளத்தில் ட்ராமுக்கு முன்னால் நபர் ஒருவர் மிதிவண்டியில் பயணித்துக்கொண்டிருந்துள்ளார். இதனால் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டது.

ஆனால் எச்சரிக்கை மணியை கேட்டு கோபடைந்த அந்த நபர் மிதிவண்டியில் இருந்து இறங்கி வந்து ட்ராமில் இருப்பவர்களை சரமாரியாக திட்டியுள்ளார்.

அதைத் தொடர்ந்து ட்ராமின் தண்ணீன் வழிப்பானை உடைந்து எறிந்துள்ளார். பின்னர் அவர் மீண்டும் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு அதே தண்டவாளத்தில் பயணித்தார்.

இந்த காணொளி சமூகவலைத்தளத்தில் எட்டு இலட்சம் தடவைகளுக்கு மேல் பார்வையிடப்பட்டுள்ளது. இது தொடரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக RATP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1137 total views