கழிவறைக்குள் 6 நாட்கள் சிக்கிய 83 வயது பிரான்ஸ் பெண்மணி! மருமகள் மேற்கொண்ட சமயோசித முடிவு!

Report

பிரான்ஸில் கழிவறைக்குள் சிக்கியிருந்த 83 வயது பெண்மணி ஒருவரை 6 நாட்களுக்கு பிறகு பொலிசார் மீட்டுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.

பிரான்சின் பிரிட்டானி பிராந்தியத்தில் உள்ள டினான் நகரில் தனியாக குடியிருந்து வந்துள்ளார் 83 வயதான குறித்த பெண்மணி.

இந்த நிலையில் இவரிடம் இருந்து சில நாட்களாக தகவல் ஏதும் இல்லை என்பதால் கவலையடைந்த அவரது தங்கையின் மகள் உடனடியாக அவசர உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தகவல் அறிந்து குறித்த பெண்மணியின் குடியிருப்புக்கு விரைந்த பொலிசார், அதிர்ஷ்டவசமாக அவர் உயிருடன் இருப்பதை கண்டறிந்தனர்.

ஆனால் சுமார் ஆறு நாட்கள் அவர் கழிவறைக்குள் சிக்கியிருந்ததால் மிகவும் பலவீனமாகவும் உடல் சோர்ந்த நிலையிலும் காணப்பட்டார்.

செப்டம்பர் 10 ஆம் திகதி குறித்த பெண்மணியை பொலிசார் மீட்டதாக கூறுகின்றனர். அதற்கு முன்னரே அவர் கழிவறையில் உதவிக்காக காத்திருந்துள்ளார் என கூறப்படுகிறது.

மிகவும் மோசமான நிலையில் இருந்த அந்த கழிவறையில் நீண்ட ஆறு நாட்கள் அவர் எப்படி உயிருடன் தாக்குப் பிடித்தார் என்பது வியப்பாகவே உள்ளது என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் சேர்ப்பித்து சிகிச்சை பெற்றுவரும் அவர், உடல் நிலை தேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்தை பொலிசார் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் செப்டம்பர் 16 ஆம் திகதி பதிவு செய்துள்ளனர்.

1104 total views