பிரான்ஸில் நபர் ஒருவரை கொலை செய்துவிட்டு தப்பி சென்ற இரு சந்தேக நபர்கள்! பொலிஸார் தீவிர சோதனை

Report

Grande-Borne, Grigny (Essonne) நகரில் நபர் ஒருவரை இரு சந்தேக நபர்கள் கொடூரமாக தாக்கி கொலைசெய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Grande-Borne, Grigny (Essonne) நகரிலுள்ள குறித்த பகுதியில் வைத்து நபர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். மகிழுந்துக்குள் வைத்து மோசமாக தாக்கிவிட்டு இரு நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்ட போது, தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழந்திருந்துள்ளார். உயிரிழந்த நபர் 35 வயதுடையவர் எனவும், காவல்துறையினரால் நன்கு அறியப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டாம் சந்தேக நபர் தேடப்பட்டு வருகின்றார். தாக்குதல் நடத்திய இருவரும் அவரது உறவினர்கள் எனவும் அறிய முடிகிறது. விசாரணைகளை Essonne நகர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

948 total views