கர்ப்பிணி பெண்ணை கடித்துக்குதறிய நாய்கள்! இறுதியில் நேர்ந்த சோகம்

Report

கர்ப்பிணி பெண் ஒருவரை நாய்கள் கடித்துக்குதறியதில், அவர் உயிரிழந்துள்ளார்.

சனிக்கிழமை நண்பகல் Retz (Aisne) காட்டில் வைத்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. 29 வயதுடைய குறித்த பெண் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவரது நாயை அழைத்துக்கொண்டு காட்டுக்குள் நடை பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதன் போது நாய்கள் அவரை சுற்றிவளைக்க அவர் தனது கணவரை தொலைபேசியூடாக உதவிக்கு அழைத்துள்ளார். உடனடியாக வேலைத்தளத்தில் இருந்து புறப்பட்ட கணவர், மனைவியை தேடி காட்டுக்கு வந்து சேர்ந்தார். ஆனால் துரதிஷ்ட்டவசமாக நாய்கள் அப்பெண்ணை கடித்து குதறி கொன்றுள்ளது.

குறித்த பெண்ணை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாய்கள் சேர்ந்து கடித்து குதறியுள்ளன. பின்னர் காவல்துறையினர் அழைக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.

1526 total views