பரிசில் அவசரகால வைத்தியரை தாக்கிய வெளிநாட்டு அகதி! மூவர் கைது

Report

வைத்தியசாலையில் அவசரகால வைத்தியர் ஒருவரை வெளிநாட்டு அகதி ஒருவர் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் பரிசில் வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்னர்.

மேலும் இச்சம்ப்வம் குறித்து தெரிவருவது,

பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள Bichat வைத்தியசாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வியாழக்கிழமை இரவு 9:30 மணிக்கு வைத்தியர் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். Goutte d'Or (18 ஆம் வட்டாரம்) காவல்நிலையத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய நபர் ஆஃப்கானிஸ்தானிஸ்தானைச் சேர்ந்த அகதி எனவும், தாக்குதல் நடத்திய காரணங்கள் எதுவும் அறிய முடியவில்லை. தாக்குதல் நடத்திய நபரோடு மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1415 total views