படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் ஒருவர்

Report

பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை இரவு 17 ஆம் வட்டாரத்தின் rue Gauthey வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

23:20 மணிக்கு கொலைசெய்யப்பட்ட பெண்ணின் கணவர் காவல்துறையினர் அழைத்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.

மர்மமான முறையில் குறித்த பெண் இறந்து கிடந்ததாக காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கொலைசெய்யப்பட்ட பெண்ணின் கணவரையும், கணவரி சகோதரியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1345 total views