கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் : தொழிற்சங்கத் தலைவர் உறுதி..!

Report

டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும் என CGT தொழிற்சங்க பொதுச் செயலாளர் அறிவிற்றுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை பத்திரிரை ஒன்றுக்கு பேட்டியளித்த CGT தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் Philippe Martinez இதனை தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 10 ஆம் திகதி மீண்டும் பாரிய வேலை நிறுத்தம் மற்றும் போராட்டத்துக்கு அழைத்துள்ள நிலையில், இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. முதலாம் நாள் போராட்டம் மிக வெற்றிகரமாக முடிந்துள்ளது.

பெரும்பான்மையான பிரெஞ்சு மக்கள் எங்கள் போராட்டத்துக்கு அதரவு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு எங்கள் கோரிக்கையின் நியாயம் புரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.

போராட்டம் தொடருமா என கேட்கப்பட்ட கேள்விக்கு, நாங்கள் மீளமுடியாதவர்கள். புதிய ஓய்வூதிய சீர்திருத்தத்தை திரும்பப்பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என உறுதிப்பட தெரிவித்தார்.

1264 total views