மீண்டும் வேலை நிறுத்தத்தை தொடரவுள்ள பல்வேறு தொழிற்சங்கள்!

Report

நாளை பல்வேறு தொழிற்சங்கள் ஒன்றிணைந்து மீண்டும் வேலை நிறுத்தத்தை தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 9 ஆம் திகதி, ஆர்ப்பாட்டத்தின் ஐந்தாம் நாள் நாளை 85 வீத போக்குவரத்துக்கள் தடைப்பட உள்ளனர். பயணிகள் தங்கள் பயணங்களை பிற்போடுமாறு SNCF தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்-து-பிரான்சுக்குள் RER, மெற்றோ மற்றும் ட்ராம் சேவைகளும் தடைப்பட உள்ளன. முதலாம் மற்றும் 14 ஆம் இலக்க மெற்றோக்கள் தடை இன்றி இயங்கும்.

போக்குவரத்து தடை குறித்த விரிவான தகவல்கள் நாளை காலை வெளியிடப்படும். அதேவேளை, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கான நஷ்ட்ட ஈடும் விரைவில் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1335 total views