கொரேனா காரணமாக பிரான்சில் இனவெறியை சந்தித்த நபர்- விடுத்த உருக்கமான வேண்டுகோள்!

Report

சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் பல நாடுகளுக்கும் பரவத்தொடங்கிய பின்னர் பிரான்சில் ஆசிய நாட்டவர்களிற்கு எதிரான இனவெறி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை குறித்து பிரான்சில் உள்ள ஆசிய நாட்டவர்கள் சமூக ஊடகங்களில் கவலை வெளியிட்டு வருகின்றனர்.

நான் வைரஸ் இல்லை என்ற ஹாஸ்டாக்கினை பயன்படுத்தி தாங்கள் சந்திக்கும் நெருக்கடிகளை அங்குள்ள ஆசிய நாட்டவர்கள் பதிவு செய்துள்ளனர்

அந்தவகையில் பிரான்சின் கொல்மர் நகரில் வசிக்கும் கதே டிரான் என்ற பெண் தான் வேலைக்கு செல்லும்போது இருவர் தன்னை பார்த்தவுடன் கவனம் சீனா பெண்மணியொருவர் எங்களின் வழியில் வருகின்றார் என தெரிவித்ததாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

நான் வேலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தவேளை என்னை கடந்து சென்ற நபர் ஒருவர் என்னை முகக்கவசத்தை அணியுமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் நடந்துகொள்ளும் விதம் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை என்றும் அவர்கள் தங்கள் இனவாதத்தை வெளிப்படுத்துவதற்காக கொரோனாவை பயன்படுத்துவதகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

அதோடு இம் முறை நாங்கள் ஒருபோதும் எதிர்கொள்ளாத அளவு இனவாதம் காணப்படுகின்றது எனவும்அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

இதேவேளை நாங்கள் இருமினால் தும்மினால் நாங்கள் ஆபத்தானவர்களா என கேட்பதை நிறுத்துங்கள் என மற்றொருவர் பதிவு செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் லூ செங்வாங் என்பவர் டுவிட்டரில் நான் ஒரு சீன இனத்தவன் ஆனால் நான் வைரஸ் இல்லை என பதிவு செய்துள்ளார்.

அனைவரும் வைரஸ் குறித்து அச்சத்துடன் உள்ளது தெரியும் ஆனால் முற்கற்பிதங்கள் வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பிரான்சில் உள்ள சீனர்கள் மாத்திரம் அவமானப்படுத்தப்படவில்லை என பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வியட்நாம் கம்போடிய பெற்றோரிற்கு பிறந்த 17 வயது சனா செங் பிரான்சில் பேருந்தில் அவமானத்தை ஏற்படுத்தக்கூடிய வார்த்தை பிரயோகங்களை எதிர்கொண்டுள்ளதாக பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

அங்கு ஒரு சீன பெண் காணப்படுகின்றார், அவர் வைரஸ்பரவச்செய்யப்போகின்றார்,அவர் வீட்டிற்கு செல்லவேண்டும் என பயணிகள் தெரிவித்ததாக அந்த யுவதி பதிவு செய்துள்ளார்.

மேலும் அவரை பாருங்கள் ஒரு வைரஸ் போல காட்சியளிக்கின்றார் என பயணியொருவர் தெரிவித்ததாகவும் அந்த யுவதி மிகுந்த கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.

4382 total views