பிரெஞ்சு கிராமம் ஒன்றில் நோய்வாய்ப்படுவதற்கு தடை! வெளியான ஆச்சரிய தகவல்

Report

பிரெஞ்சு கிராமம் ஒன்றில் நோய்வாய்ப்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பாரீஸுக்கு மேற்கே அமைந்துள்ள Sarthe என்ற கிராமப் பகுதியைச் சேர்ந்த ஒன்பது மேயர்கள் நோய்வாய்ப்படுவதற்கு தடைவிதித்து அரசாணை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.

இப்பகுதியில் உடல் நலம் பாதிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, அப்படி உங்களுக்கு உடல் நலம் பாதித்து மருத்துவ உதவி வேண்டுமானால் பாரீஸில் சென்று குடியேறுங்கள் என்று கூறுகிறது அந்த அரசாணை.

இது என்ன வேடிக்கை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உண்மையில் அந்த பகுதியில் போதுமான மருத்துவ வசதி இல்லை என்பதை அரசுக்கு தெரிவிக்கவே அப்பகுதி மேயர்கள் இப்படி ஒரு அரசாணையை உருவாக்கியுள்ளனர்.

கிராமப்புற மேயர்கள் கூட்டமைப்பின் தலைவரான Dominique Dhumeaux என்பவர், பிரச்சனையில் தலையிடுமாறு அரசை வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் இல்லாமை, ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் சமீபத்தில் மூடப்பட்ட மருத்துவமனைகள் என்பது போன்ற விடயங்களை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காகவே Sarthe கிராம மக்கள் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

1059 total views