கொரோனா வைரஸால் முதல் பிரான்ஸ் பிரஜை உயிரிழப்பு!

Report

பிரான்ஸ் பாரிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 60 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தமது நாட்டைச் சேர்ந்த பிரஜை எனவும், தனது நாட்டுப் பிரஜையொருவர் கொரோனாவினால் உயிரிழக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவெனவும் பிரான்ஸ் சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் பிரான்ஸ் தலைநகரில் உள்ள பிட்டி சால்பெட்ரியர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார ஆணைய இயக்குநர் ஜெனரல் ஜெரோம் சாலமன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதேவளை கொரோனா தொற்று தொடர்பில் இன்றை தினம் இரண்டு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

4509 total views