பிரான்சில் 10 சிறைக்கைதிகளுக்கு வைரஸ்... 5000 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்?

Report

பிரான்சின் சிறைகளில் 10 சிறைக்கைதிகளுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, 450 சிறைக்கைதிகளுக்கு அறிகுறிகள் காணப்படுவதாக சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்று ஏற்படுவதனை தடுக்கும் வகையில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், காவால்துறை பணியாளர்களின் நலன்கருதி கண்காணிப்பு கமராக்கள் மூலமான கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் 70,500 கைதிகள் நாட்டின் பல சிறைக்கூடங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், விடுதலை செய்யவற்குரிய முகாந்திரம் உள்ள 5,000 கைதிகளை விடுவிக்கும் யோசனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அமைச்சரவைக் முடிவினைத் தொடர்ந்தே இது தொடர்பில் தெளிவான முடிவுக்கும் வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

576 total views