கொரோனா வைரசுக்கு முதலாவது ஜொந்தாம் அதிகாரி பலி..!

Report

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து, ஜொந்தாம் அதிகாரி ஒருவர் இந்த வைரசினால் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

la Gendarmerie nationale இத்தகவலை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது. 51 வயதுடைய ஜொந்தாம் அதிகாரி ஒருவர் Covid 19 வைரசினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த அதிகாரி மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் Maisons-Alfort (Val-de-Marne) நகரில் வசிப்பவர் எனவும் அறிய முடிகிறது.

குறித்த அதிகாரி கடந்த சில நாட்களுக்கு முன்பாக சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அவருக்கு மோசமான அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னரே அவர் திடீரென உயிரிழந்துள்ளதாக அறிய முடிகிறது.

1864 total views