பிரான்ஸில் திடீரென மர்ம நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு... மூவர் பலி! ஒருவர் மருத்துவமனையில்...

Report

பிரான்சில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மூவர் பலியானார்கள், ஒருவர் காயமடைந்தார்.

மேற்கு பிரான்சிலுள்ள குவாரி ஒன்றின் அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் கூட்டம் ஒன்று நடந்துகொண்டிருக்கும்போது, திடீரென கூட்டத்திற்குள் நுழைந்த அந்த நபர் துப்பாக்கியால் அங்கு கூடியிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில், மூன்று பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அவரது உயிருக்கு ஆபத்தில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். பின்னர் துப்பாக்கியால் சுட்ட அந்த நபர் தன்னைத்தான் சுட்டுக்கொண்டுள்ளார். ஆனால், அவர் உயிரிழக்கவில்லை.

அவரையும் பொலிசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் எதற்காக துப்பாக்கியால் சுட்டார் என்பது இன்னமும் தெரியவரவில்லை.

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு 20க்கும் அதிகமான பொலிசார், Thouars, Bressuire மற்றும் Poitiers பகுதி ராணுவ வீரர்கள் உட்பட, துணை ராணுவப்படையினரும் அனுப்பப்பட்டுள்ளனர்.

1289 total views