பிரான்ஸில் பார்கள், திரையரங்குகள், உணவகங்கள் மற்றும் சில திறப்பது குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்!

Report

கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கான கட்டுப்பாடுகளை பிரான்ஸ் தொடர்ந்து தளர்த்தும் என்றும் பார்கள், கபேக்கள், பூங்காக்கள் மற்றும் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்தும், 100 கி.மீ பயண வரம்பைக் குறைக்கவும் நாடு தயாராகி வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கும், அதை எதிர்த்து போராடுவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 14-ஆம் திகதி முதல் மூடப்பட்ட பார்கள் மற்றும் உணவகங்கள் ஜுன் 2-ஆம் திகதி முதல் திறக்க துவங்கும் என்று பிரதமர் Edouard Philippe தெரிவித்துள்ளார்.

மேலும், இடைநிலை (கல்லூரிகள்) மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்படுவதையும் அரசாங்கம் துரிதப்படுத்தும். கலாச்சார மற்றும் விளையாட்டு வாழ்க்கை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும்.

இன்னும் மூடப்பட்டிருக்கும் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிகங்கள் மீண்டும் திறக்கப்படும். ஆனால் சில விஷயங்கள் மாறாது. அதாவது பொது இடங்களில் 10 பேருக்கு மேல் கூடக்கூடாது, வீட்டில் இருந்தே வேலை செய்யும் படி பரிந்துரைக்கப்படுகிறது.

பாதிக்கப்படக்கூடியவர்கள், முதியவர்கள் மற்றும் சுகாதார பிரச்சினைகள் உள்ளவர்கள் இன்னும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு பொறுத்தவரை நிலைமை நன்றாக இருக்கின்றன, ஆனால் எல்லாவற்றையும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு போதுமானதாக இல்லை என்று கூறி, அவர் ஜுன் 2-ஆம் திகதி முதல் மீண்டும் திறப்பதற்கான சில திட்டங்களை முன் வைத்தார்.

பார்கள் மற்றும் உணவகங்கள்

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக உணவகத் துறை பெரும் இழப்பை சந்தித்துள்ளது. ஜூன் 2-ஆம் திகதி முதல் அனைத்து பகுதிகளிலும் கபேக்கள், பார்கள் மற்றும் உணவகங்களை மீண்டும் திறக்க முடியும் என்று பிரதமர் கூறினார்.

ஆனால், இது ஆரஞ்சு மண்டலங்கள் (பாரிஸ் உட்பட) கொண்டவைகள் மட்டுமே மீண்டும் திறக்க முடியும்.

பணியாற்றும் எல்லா ஊழியர்களும் எல்லா நேரங்களிலும் முகமூடியை அணிய வேண்டும். அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அவர்கள் ஸ்தாபனத்தில் நகரும் போதெல்லாம் முகமூடியை அணிய வேண்டியிருக்கும் அவர்கள் மேஜையில் அமர்ந்திருக்கும்போது அதை அகற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 கி.மீற்றர் விதி

பிரான்சில் வீட்டிலிருந்து 100 கி.மீற்றர்க்கு மேல் பயணிப்பதை தடைசெய்யும் விதி ஜூன் 2-ஆம் திகதி ரத்து செய்யப்படும். அதாவது அந்த திகதியில் இருந்து மக்கள் நாட்டிற்குள் சுதந்திரமாக சுற்றிச் செல்ல முடியும்.

சர்வதேச பயணத்தின் தற்போதைய விதிகள் ஜூன் 15-ஆம் திகதி வரை பராமரிக்கப்படும். ஆனால் அதன் பின்னர் ஐரோப்பாவிலிருந்து பயணத்திற்கான எல்லைகளை மீண்டும் திறப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

பூங்காக்கள், கடற்கரைகள் மற்றும் தோட்டங்கள்

இந்த வார இறுதியில் அனைத்து பகுதிகளிலும் பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் மீண்டும் திறக்கப்படும்(ஆரஞ்சு மண்டலம்).

கடற்கரைகள் மற்றும் ஏரிகள்

கடற்கரைகள் மற்றும் ஏரிகள் ஜூன் 2 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்.

ஜிம்கள் மற்றும் நீச்சல் குளங்கள்

அனைத்து ஜிம்களும் ஜூன் 2 ஆம் திகதி முதல் பச்சை மண்டலங்களிலும், ஜூன் 22 ஆம் திகதி முதல் ஆரஞ்சு மண்டலங்களிலும் மீண்டும் திறக்கப்படும்.

திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியகங்கள்

தியேட்டர்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஜூன் 2 ஆம் திகதி பச்சை மண்டலங்களில் மீண்டும் திறக்கத் தொடங்கலாம், அதே நேரத்தில் ஆரஞ்சு மண்டலங்கள் ஜூன் 22 வரை காத்திருக்க வேண்டும்.

ஜூன் 22 ஆம் திகதிக்கு பின் சினிமாக்கள் முழு நாட்டிலும் மீண்டும் திறக்கப்படலாம்.

ஆனால், இந்த எல்லா இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

1098 total views