பிரான்ஸில் முதன்முறையாக திறக்கப்பட உள்ள மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்கள்!

Report

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை பிரான்ஸ் தொடர்ந்து நெகிழ்த்த உள்ளது. அதன் ஒரு பகுதியாக, மதுபான விடுதிகள் திறக்கப்பட உள்ளன.

மார்ச் 14ஆம் திகதி மூடப்பட்டபின், ஜூன் மாதம் 2ஆம் திகதியிலிருந்து பிரான்சில் மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்கள் முதன்முறையாக திறக்கப்பட உள்ளன. ஊரடங்கால் உணவகத்துறை பெருமளவில் நஷ்டத்தை சந்தித்தது.

இந்நிலையில், ஜூன் மாதம் 2ஆம் திகதியிலிருந்து மதுபான விடுதிகள், காஃபி ஷாப்கள், உணவகங்கள் திறக்கப்பட இருப்பதாக பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.

என்றாலும், பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும். மேலும், வாடிக்கையாளர்கள் அங்குமிங்கும் செல்லும்போது முகக்கவசம் அணியவேண்டும்.

அவர்கள் தங்கள் மேசையில் உட்கார்ந்திருக்கும்போது முகக்கவசத்தை அகற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு விடுதிகள், காட்சியகங்கள் ஆகியவற்றிற்கு இப்போதைக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1169 total views