பிரான்ஸில் மிகப் பெரிய வணிக வளாகம் 3 மாதங்களுக்கு பின் இன்று திறப்பு... முக்கிய தகவல்

Report

பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திறக்கப்படாமல் இருந்த மிகப்பெரிய வணிக வளாகமான லிச் கேலரிஸ் லாபாயெட் திறக்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் இதுவரை 186,835 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 28,714 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் நாட்டில் இப்போது கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அதன் காரணமாக ஊரடங்கு காரணமாக இருக்கும் சில விதிகள் தளர்த்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி சிவப்பு மண்டலமாகவும், அதற்கு அடுத்த படியாக ஆரஞ்சு மண்டலமாகவும், கொரோனா பாதிப்பே இல்லாத பகுதி பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

இதில், ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் வரும் ஜுன் 2-ஆம் திகதி முதல் பல்வேறு பார்கள், உணவகள் போன்றவை திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு பின்னர் இன்று தலைநகர் பாரிசில் மிக முக்கியமான வணிக வளாகமான Galeries Lafayette திறக்கப்படவுள்ளது.

இருப்பினும் பரிசில் மிக முக்கியமான வணிக வளாகமான Galeries Lafayette திறப்பதற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை.

பின்னர், நேற்று வெள்ளிக்கிழமை காவல்துறை தலைமைச் செயலகம் வளாகம் திறப்பதற்கு அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது.

இன்று முதல் திறக்கப்படும் இந்த வளாகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும், அவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4139 total views