பாரீஸில் வெறிச்சோடிய உணவகங்கள், மதுக்கடைகள்

Report

பிரான்ஸ் பாரீஸ் நகரில் கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமலானது.

இதன் காரணமாக நேற்று இரவு விருந்துகள் ரத்து செய்யப்பட்டு உணவகங்களும், மதுக்கடைகளும் வெறிச்சோடின.

கொரோனா இரண்டாவது அலையால் பாரிஸ் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்த வாரம் அதிபர் இமானுவல் மாக்ரான் நான்கு வாரங்களுக்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கை அறிவித்ததுடன் இரவு நேரப் பார்ட்டிகளால்தான் கொரோனா அதிகம் பரவுவதாக அவர் தெரிவித்தார்.

அதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்கத் தொடங்கியுள்ளனர்.

இருப்பினும் உணவகம் மற்றும் மதுக்கடை உரிமையாளர்கள் மிகப்பெரிய வருவாய் இழப்பு குறித்து கவலை தெரிவிக்கின்றனர்.

5624 total views