பிரான்ஸில் Saint-Denis நகர பொலிஸார் ஆயுதம் பயன்படுத்த அனுமதி!

Report

பிரான்ஸில் செந்தனி நகர பொலிஸார் ஆயுதம் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம் செந்தனி நகர முதல்வரால் இயற்றப்பட்டு கடந்த 16 ஆம் திகதி இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

செந்தனி நகர 'நகரசபை' பொலிஸார் கடமையின் போது துப்பாக்கிகளை பயன்படுத்தலாம். அதேவேளை, அவர்கள் மோப்ப நாய்களை பயன்படுதும் 'படை' ஒன்றையும் உருவாக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொலிஸார் B மற்றும் C வகை ஆயுதங்களை பயன்படுத்தலாம். அதேவேளை 120 அதிகாரிகள் கொண்ட புதிய படை ஒன்றும் உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3279 total views