ஜேர்மனியில் அவசர நிலை அறிவிப்பு

Report

தெற்கு ஜேர்மனியில் உள்ள பவாரியா மாநிலத்தில் உள்ள ஒரு நகரத்தில் அதிக பனிப்பொழிவு காரணமாக அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பவேரியாவில் உள்ள பெர்செத்ச்கேடென் என்றநகரில், பனிமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அப்பகுதியின் பல இடங்களிலும் பனிமலை சூழ்ந்துள்ளது.

மேலும் பனிப்படிவுகள் பாரிய அளவில் உள்ளதால், அந்த நகரத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தின் உதவியும் கோரப்பட்டுள்ளது.

அத்தோடு ஒஸ்திரியாவின் சல்ஸ்பர்க்கின் தெற்குப் பகுதியையும் பொறுத்தவரை, நகரம் பெரும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டது. அத்தோடு இன்று வியாழக்கிழமை மேலும் அரை மீட்டர் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்பட்டது.

இதன் காரணமாக இந்த வாரத்தின் ஆரமபத்தில் இருந்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், ரயில் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன.

இதேவேளை கடந்த 2006 ஆம் ஆண்டு கூரை மீது கடுமையான பனி சூழ்ந்து பின்னர் அது உடைந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர் என்றும் அவர்களில் பன்னிரண்டு குழந்தைகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

11417 total views