ஹீரோ என நாடே புகழும் பவேரிய சிறுவன்: அப்படி என்ன செய்தான்?

Report

13 வயது பவேரிய சிறுவன் ஒருவனை நாடே ஹீரோ என தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. அப்படி அவன் என்ன செய்து விட்டான்?

பவேரியாவின் Windischeschenbachஐச் சேர்ந்த Justin Fischer (13), நீச்சல் குளம் ஒன்றின் அடியில் ஒரு சிறுவன் அசைவின்றி கிடப்பதைக் கண்டுள்ளான். சற்றும் யோசிக்காமல் குளத்தில் குதித்த Justin, அந்த சிறுவனை கரைக்கு இழுத்துக் கொண்டு வந்திருக்கிறான்.


அந்த சிறுவனின் உதடுகள் நீலமாகி விட்டன, அவனுக்கு மூச்சு வரவில்லை என்கிறான் Justin. உடனடியாக Justin உதவி கோரி சத்தமிட, நீச்சல் குள ஊழியர் ஒருவர் ஓடி வந்து அந்த சிறுவனுக்கு முதலுதவி அளித்திருக்கிறார்.

சற்று நேரத்தில் அந்த சிறுவன் மூச்சு விட ஆரம்பித்திருக்க்கிறான். பொலிசார், நீச்சல் குள உதவியாளர்கள் என ஆளாளுக்கு Justinஐப் பாராட்ட, அவனோ குளத்தில் குதித்து அந்த சிறுவனுக்கு உதவியது சாதாரண விடயம்தான் என்கிறான்.

இதற்கிடையில் விளையாடிக் கொண்டிருந்த மகனைக் காணாமல் தேடி வந்த அந்த சிறுவனின் தாய் நீச்சல் குளத்திற்கு வரவும், அந்த சிறுவன் மூச்சு விடவும் சரியாக இருந்திருக்கிறது.

உடனடியாக அந்த சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். மருத்துவமனையில் அவனை அனுமதித்த பொலிஸ் அதிகாரிகள் அவனுக்கு ஆறுதல் கூறிவிட்டு, அவன் உடல் நலம் பெற்றதும் தாங்களே வந்து அவனை வீட்டில் கொண்டு விடுவதாக கூறிவிட்டு வந்திருக்கிறார்கள்.

அதேபோல், அவன் உடல் நலம் பெற்றதும், அவனை தங்கள் பொலிஸ் வாகனத்தில் கொண்டு வீட்டில் விட்டுள்ளதை ட்விட்டர் பதிவு ஒன்றின்மூலம் அறிய முடிகிறது.

Jakob என்று அழைக்கப்படும் அந்த சிறுவன் நலம் பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

1343 total views