ஜேர்மனியில் மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் தீ விபத்து- 8 பேர் பலி, 29 பேர் காயம்!

Report

ஜேர்மனியில் மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜேர்மனியின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள வெஜ்பிர்டி என்ற நகரின் மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லம் ஒன்றிலேயே இந்த தீ விபத்து இன்றைய தினம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து விரைந்து சென்ற மீட்பு படையினர் விபத்தில் சிக்கியர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதேவேளை ஜேர்மனியில் கடந்த மூன்று தசாப்தங்களுக்குள் இடம்பெற்ற இரண்டாவது பெரிய தீ விபத்து இதுவாகும்.

கடந்த 2010 ஆம் ஆண்டில், ப்ராக் நகரில் வீடற்ற மக்கள் அடிக்கடி பயன்படுத்திய கைவிடப்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

அதற்கு முன்னதாக 1995 இல் ஜேர்மன் தலைநகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2042 total views