அமெரிக்காவில் வெள்ளையின பொலிஸாரால் கொல்லப்பட்ட கருப்பினத்தவர்: உலகம் முழுவதும் பரவும் எதிர்ப்பு போராட்டங்கள்!

Report

அமெரிக்காவில், ஜார்ஜ் ஃப்லாய்ட் என்னும் கருப்பினத்தவர், தான் எந்த தவறும் செய்யவில்லை என வலியுறுத்திய நிலையிலும், வெள்ளையினத்தவரான பொலிசார் ஒருவர் அவரது கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தியதில் பரிதாபமாக பலியானார்.

இந்த சம்பவத்தால் அமெரிக்காவே பற்றியெரியும் நிலையில், தற்போது மொத்த உலகின் கவனமும் அமெரிக்கா பக்கம் திரும்பியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது ஜார்ஜின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் பேரணிகள் நடத்துகிறார்கள்.

சில இடங்களில் வன்முறை, பொருட்கள் சேதமும் நிகழ்ந்துள்ளது. ஜேர்மனியில் பரபரப்பாக விற்பனையாகும் நாளிதழான Bild, ‘கொலைகார அமெரிக்க பொலிசார் அமெரிக்காவையே தீவைத்துக் கொளுத்திவிட்டார்’ என்று தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜார்ஜ் இறக்கும்போது கூறிய ‘என்னால் மூச்சு விட முடியவில்லை’ என்ற வார்த்தைகள் மீதமிருக்கும் பெர்லின் சுவரில் எழுதபட்டுள்ளன.

ஜேர்மனியில் கால்பந்து போட்டியில் விளையாடும் இங்கிலாந்து கால்பந்து வீரர்களில் ஒருவரான Jadon Sancho, கோல் ஒன்றைப் போட்டதும் தனது ஜெர்ஸியை அகற்ற, அதனுள் அவர் அணிந்திருந்த சட்டையில், ‘ஜார்ஜ் ஃப்லாய்டுக்கு நீதி வேண்டும்’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

பிரான்ஸ் நாட்டவரான Marcus Thuram கோல் ஒன்றை போட்டதும், மைதானத்தில் ஐந்து விநாடிகளுக்கு முழங்காலிட்டார்.

அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் முழங்காலிட்டுள்ள புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டு, இந்த படத்திற்கு விளக்கம் தேவையில்லை என்று எழுதப்பட்டுள்ளது.

1158 total views