புகை பிடிப்பவர்களுக்கு இனி ஆபத்து! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Report

புகை பிடிப்பவர்களுக்கு ஆணுறுப்பு சிறிதாகும் அபாயம் உள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் புகை பிடிப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கின்றனர். புகை பிடித்தல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என எவ்வளவு விளம்பரம் செய்தாலும் அவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

இந்நிலையில், உலகின் பிரபல யூராலஜி டாக்டரான மார்க் லெனஜிடோ சமீபத்தில் அளித்த பேட்டில் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களை பற்றிய சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்; ஆண்களுக்கு விரைப்பு தன்மையின்மை என்பது மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. இதை சரி செய்வது அவ்வளவு எளிதான விஷயமாக இருப்பதில்லை. ஆணுப்பில் ரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தால் மட்டுமே விரைப்பு தன்மை ஏற்படும்.

புகைபிடிப்பவர்களுக்கு ரத்தம் ஓடும்பாதைகளில் ஆங்காங்கே அடைப்பு ஏற்படுகிறது. அதனால் ஆணுறுப்பில் ரத்த ஓட்டம் குறைகிறது. சிகரெட்களில் உள்ள நிக்கோட்டின் ரத்த குழாயை சிறிதாக்குகிறது இதனாலும் கூட ரத்த ஓட்டம் பாதிக்கிறது.

இது பெரும்பாலும் தற்காலிகமாகவும், வெகு சில நேரங்களில் நிரந்தரமாகவும் இந்த பிரச்னையை ஏற்படுத்துகிறது. ரத்தகுழாய் சிறிதாக இருந்தால் ரத்த ஓட்டத்தின் அளவு குறையும் இதனால் விரைப்பு தன்மை குறையலாம். இது மட்டும்மல்ல இது ஆணுறுப்பை சிறிதாக்கும் அபாயமும் இருக்கிறது.

அதிக புகைபழக்கம் இருப்பவர்களுக்கு உடலுறவின் போது நீங்கள் எதிர்பார்க்கும் விரைப்பு தன்மை இல்லாமல் போகலாம் அல்லது விரைப்பு தன்மையே இல்லாமல் போகலாம்.

இதே போல தன் பெண்களுக்கும், புகைபிடிக்கும் பழக்கம் உள்ள பெண்களுக்கு செக்ஸ் வாழ்க்கை திருப்தியில்லாமல் இருக்கும். அல்லது நீண்ட நேரம் செக்ஸை தொடர முடியாமல் இருக்கும் என கூறினார்.

2079 total views