குளிர்ச்சியான தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? அப்படினா இது உங்களுக்குத் தான்!

Report

நம்மில் பலருக்கும் இருக்கும் பொதுவான பழக்கங்களில் ஓன்று குளிர்ச்சியான நீரை குடிப்பது. மற்ற நாட்களை விட்டு குளிர்காலங்களில் குளிர்ச்சியான நீரை அருந்துவது மேலும் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

செரிமானம்:

பொதுவாக நமது உடலுக்கு 37 டிகிரி செல்சியஸ்தான் போதுமான வெப்பநிலை. நீங்கள் குளிர்ச்சியான நீரை அருந்தும்போது உங்கள் உடலால் இருக்கும் வெப்பநிலை குறைகிறது.

இதனால் அதனை சரி செய்ய நமது உடல் அதிக ஆற்றலை செலவிடுகிறது. இதனால், நீங்கள் சாப்பிட உணவு செரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

தொண்டை பிரச்சனை:

பொதுவாக குளிர்காலம் என்றாலே ஜலதோஷம், தொண்டை கரகரப்பு போன்றவை ஏற்படுவது வழக்கம்.

இதுபோன்ற சமயத்தில் குளிர்ச்சியான நீரை அருந்துவதால் தொற்றுகள் ஏதெனும் இருப்பின் அதை இரட்டிப்பாகி சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

நல்ல கொழுப்பை கரைகிறது: பொதுவாக உணவு அருந்திய பிறகு குளிர்ச்சியான நீரை அருந்துவதால் உடலில் உள்ள நல்ல கொழுப்புகளை கரைத்து, உடலில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிவிடுகிறது.

இதனால் உணவு அருந்திய பிறகு குளிர்ந்த நீரை அருந்துவது மிக மிக ஆபத்தான ஓன்று.

இதய துடிப்பு குறைதல்:

குளிர்ச்சியான நீரை அருந்தும்போது செரிமானம் மற்றும் இதயத் துடிப்பை பாதுகாக்கும் வேகஸ் நரம்பின் செயல்பாட்டை குறைகிறது. இதனால் இதய துடிப்பு குறைந்து பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

2235 total views